Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சாரத் தொழில்: சென்னையில் பிரபல அம்மா நடிகை கைது!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2012 (05:24 IST)
சென்னையில் நீண்டகாலமாக நடந்து வரும் துணைநடிகைகளை வைத்து விபச்சாரம் செய்தல் விவகாரத்தில் 40வயதான பிரபல அம்மா நடிகை சோபனா கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

ஒரு விபசார கும்பல் கிண்டி ரேஸ் கிளப் அருகே ரகசியமாக காரில் வந்து உட்கார்ந்து, வாடிக்கையாளர்களை அங்கு வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து உல்லாச விருந்து படைப்பதாக போலீசுக்கு ரகசிய புகார் வந்தது.

பிரபல அம்மா நடிகை சோபனா இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவதாகவும் கண்டறியப்பட்டது.

இந்த விபசார கும்பலை மடக்கிப்பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், விபசார தடுப்பு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான தனிப்படை நியமிக்கப்பட்டது.

அம்மா நடிகையிடம் போலீஸார் போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினர். போலீசார் விரித்த வலையில் சோபனா சிக்கினார்.

பிரபலமான படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ள அக்கா-தங்கை நடிகைகள் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை அழைத்து வருவதாக சொன்னார். பெரிய தொகையையும், சோபனா கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டு மாறுவேட போலீசார் வாடிக்கையாளர் போல கிண்டி ரேஸ் கிளப் அருகே காரில் காத்திருந்தனர்.

நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து அக்கா-தங்கை துணை நடிகைகள் இருவரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அடுத்து அக்கா-தங்கை இருவரும் பிடிபட்டனர்.

சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகரின் உறவினர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அக்கா-தங்கை துணை நடிகைகள் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களாக கருதப்பட்டு, மைலாப்பூர் அரசு பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments