Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபசார வழக்கில் கைதாகும் பெண்களின் படத்தை பிரசுரிக்க வேண்டாம்: ரஜினி வேண்டுகோள்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2009 (10:11 IST)
விபசார வழக்கில் கைது செய்யப்படுகிற பெண்கள் உல்லாசத்துக்காக அத்தொழிலை செய்வதில்லை. இரண்டு வேளை சோற்றுக்காக அதைச் செய்கிறார்கள். அவர்களை கைது செய்வதையும ், அவர்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்வதையும் புகைப்படமாக எடுத்து பிரசுரிப்பதை பத்திரிகைகள் தயவு செய்து நிறுத்த வேண்டும் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில ், மற்ற சில நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறியதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகளின் பெயர்கள் படங்களுடன் வெளியானது.

நடிகைகளின் பெயரை வெளியிட்ட நாளிதழைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நேற்று மாலை கண்டன கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில், “நான் கோபமாக இருந்தால ், அதிகம் பேச மாட்டேன். ரொம்பக் கோபமாக இருந்தால் பேசவே மாட்டேன். இப்போது நான் மிகவும் கோபத்தில் இருக்கிறேன். இருந்தாலும் என் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மிகப்பெரிய அந்தஸ்திலும ், மரியாதைக்கு உரியவர்களாகவும ், நாகரிகமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கும் சிலரை பற்றி அவதூறாக ஒரு காலை நாளிதழில் செய்தியை படித்த போத ு, இது ‘ஏப்ரல் முட்டாள்கள் தினம ் ’ போல் டூப் ஆக இருக்குமோ என்று நினைத்தேன்.

சில நடிகைகளை பற்றிய அவதூறான செய்தியை படித்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இரவு முழுவதும் தூங்கவில்லை. நீங்கள் குற்றமற்றவர்கள் என்பது கடவுளுக்கு தெரியும். உங்கள் சகோதர-சகோதரிகளுக்கு தெரியும். உங்கள் உறவினர்களுக்கு தெரியும். அதனால் கவலைப்பட வேண்டாம்.

சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்த காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் கருணாநிதிக்கும ், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான ், கோபமாக இருக்கிறேன். இதற்கு மேல் பேச விரும்பவில்ல ை ” என்று கூறினார்.

தே.மு.தி.க. தலைவரும ், நடிகருமான விஜயகாந்த் பேசுகையில், “பத்திரிகைகள் தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும். காவல்துறை கட்டுப்பாடுகளுடன் செய்திகளை கொடுக்க வேண்டும். நான் நடிகர் சங்க உறுப்பினர். நடிகர் சங்கத்துக்கு கட்டுப்பட்டவன். நடிகர் சங்கம் சாதாரண அமைப்பு கிடையாது. கட்டுக்கோப்பானது.

நடிகர் சங்கத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். நடிகர், நடிகைகள் யாரும் கிள்ளுக்கீரை கிடையாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தன்மானம் இருக்கிறத ு ” என்றார்.

நடிகை ரேவதி பேசும்போத ு, “நடிகர் சங்கத்தில் ஒரு சட்டப்பிரிவை தொடங்க ி, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும ் ” என்றார். பின்னர் பேசிய நடிகர் சூர்யா, “நடிகர் சங்கத்தில் சட்டப்பிரிவு தொடங்கினால ், அதற்கு நான் பணம் கொடுக்க தயார ்'' என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments