Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய...!

Webdunia
செவ்வாய், 22 மே 2012 (20:55 IST)
தமிழகத்தில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு முடிவிலோ, மதிப்பெண்ணிலோ சந்தேகம் இருக்கும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறலாம். அல்லது மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களைப் பூர்‌த்‌தி செய்து சமர்ப்பிக்க 25ஆம் தேதி மாலை 5மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் விண்ணப்பங்கள் 5 இடங்களில் அளிக்கப்படும்.

ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை

மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர்.

மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் (மத்திய சென்னை), அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.

மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (கிழக்கு), ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.

மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (வடக்கு), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர்

ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி), புதுச்சேரி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும ்.

ஆனால், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்திலோ அல்லது சென்னை அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்திலோ விண்ணப்பங்கள் வழங்கப்படாது. இவ்வாறு, அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments