Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறையா?

Mahendran
புதன், 16 அக்டோபர் 2024 (16:43 IST)
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து நாளையும் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில், அதாவது சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு மிக கனமழையும், நான்கு மாவட்டங்களுக்கு கனமழையும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அக்டோபர் 17ஆம் தேதி வட தமிழகத்தில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், அக்டோபர் 18ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அக்டோபர் 18 முதல் 20 வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும், எனவே இந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அரபிக்கடல் பகுதியில் இன்றும் நாளையும் கர்நாடக, கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments