ரூ.993 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : ‌சித‌ம்பர‌த்‌திட‌ம் முத‌ல்வ‌ர் அ‌றி‌க்கை!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (14:14 IST)
மாமல்லபுரம் அருகே ரூ.993 கோடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அறிக்கையை மத்திய நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரத்திடம் முதலமைச்சர் கருணாநிதி நே‌ற்று வழங்கினார்.

கோடை கால‌த்‌தி‌ல் சென்னை நகரில் கடுமைய ாக ஏ‌ற்படு‌ம் க ுடிநீர் தட்டுப்ப ா‌‌ட்டு‌க்கு ‌ந ிரந்தர தீர்வ ுகான சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்த முடிவு செய்தது. இதற்காக சென்னையில் இருந்து 50 க ி.‌மீ. தொலைவில் காஞ ்‌ச ிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் மாமல்லபுரம் அருகே நெமிலி கிராமத்தில் ரூ.993 கோடியே 83 லட்சம் செலவில் சவ்வூடு முறையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மீகான் லிமிடெட ், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அடிக்கோ டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. இந்த திட்ட அறிக்கைக்கு மாநில வழிகாட்டும் மற்றும் கண்காணிப்பு குழு ஒப்புதல் அளித்தது. பின் திட்ட அறிக்கையை கட‌ந்த 22‌ஆ‌ம் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிலையில் மத்திய நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதியை நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, நெமிலி கிராமத்தில் ரூ.993 கோடியே 83 லட்சம் செலவில் அமைக்கப்பட இருக்கும் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கான விரிவான அறிக்கையை முதலமைச்சர் கருணாநிதி, அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரத்திடம் வழங்கினார். அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை செயலாளர் கு.ஞானதேசிகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் ப.சிதம்பரம் கூறுகை‌யி‌ல், நெமிலி அருகே அமைக்கப்பட இருக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை முதலமைச்சர் கருணாநிதி என்னிடம் கொடுத்து இருக்கிறார். வரைவு திட்டம் வந்தவுடன் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து உடனடியாக பரிசீலிக்கப்படும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments