Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 14,084 கோடி கல்விக் கடன்- ப. சிதம்பரம்

Webdunia
ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (14:09 IST)
மாணவர்களின் கல்விக் கடனுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுவரை 14 ஆயிரத்து 84 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமது சிவகங்கை தொகுதியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஐந்து புள்ளி எட்டு சதவிகிதமாக மட்டுமே இருந்தது என குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போது இந்த வளர்ச்சி ஒன்பது சதவிகிதத்தை எட்டியிருப்பதோடு பொருளாதார வளர்சசியில் சீனாவிற்கு அடுத்த இடத்தை இந்தியா பெற்றுள்ளது என்றார்.

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று சிதம்பரம் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments