Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌‌க்கிங் செய்தால் உடனடி ‌நீ‌‌க்க‌ம்: யு.ஜி.சி எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2009 (10:51 IST)
உயர் கல்வி நிறுவனங்களில் ர ா‌க ்கிங் கொடுமையை முற்றிலும் ஒழிக்க, ய ு. ஜ ி. சி கடும் விதிகளை வகுத்துள்ளது. அவற்றை எல்லா பல்கல ை‌க்கழக‌ங ்களுக்கும் ய ு. ஜ ி. சி அனுப்பி உள்ளது.

இது தொட‌ர்பாக அனை‌த்து ப‌ல்கல‌ை‌க்கழக‌‌ங்களு‌க்கு‌ம் ய ு. ஜ ி. சி அனு‌ப்‌பியு‌ள்ள சு‌ற்ற‌‌றி‌க்க ை: ர ா‌க ்கிங் குறித்த தகவல்களை யாரிடம் சொல்ல வேண்டும் என்பதை கல்வி நிறுவனங்கள் தெளிவாக வெளியிட வேண்டும். தகவல் கொடுப்பவர்களை பாராட்ட வேண்டும். ர ா‌க ்கிங் நடக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோரும் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கல்வி நிறுவன தலைவர், சிவில் மற்றும் காவ‌ல்துறை நிர்வாக பிரதிநிதிகள், உள்ளூர் ஊடகம், அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகளை தேர்வு செய்து ர ா‌க ்கிங் தடுப்பு குழு அமைக்க வேண்டும். அதில் ஆசிரியர்கள், பெற்றோர் மாணவர்கள் இடம்பெறலாம்.

கல்லூரிகள் முதல் 3 மாதத்தில் தாங்கள் மேற்கொண்ட ர ா‌க ்கிங் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பல்கல ை‌க்கழக‌ம் துணைவேந்தர்களுக்கு வாரம் ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையை மாநில கண்காணிப்புக் குழுவிடம் துணைவேந்தர் கொடுக்க வேண்டும்.

ர ா‌‌க ்கிங் தடுப்பு குழுவினர், மாநில அளவிலான குழுவினரின் ஆய்வுக்கு பிறகு குறிப்பிட்ட மாணவர் ர ா‌க ்கிங்கில் ஈடுபட்டது உறுதியானால், அந்த மாணவரை வகுப்பில் பங்கேற்பதில் இருந்து நிறுத்தி வைக்கலாம். கல்வி உதவித்தொகையை திரும்பப் பெறலாம். தேர்வு எழுத முடியாமல் செய்வது, தேர்வு முடிவை நிறுத்தி வைப்பது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.

கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யலாம். ஒன்று முதல் 4 செமஸ்டர்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். அந்த மாணவரை அந்த கல்வி நிறுவனத்தில் இருந்து ‌ நீ‌க்க‌ம் செய்வதுடன், வேறு கல்லூரியில் சேர முடியாமல் செய்வது உள்ளிட்ட தண்டனைகளை அளிக்க வேண்டும்.

இந்த விதிகளை கடைபிடிக்காத கல்வி நிறுவனங்கள் மீது சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வருமாற ு:

கல்லூரியின் இணைப்பு மற்றும் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த கல்லூரியில் மாணவர்கள் பட்டப் படிப்பு சான்றிதழ் பெறுவதை தடை செய்ய வேண்டும்.

ய ு. ஜ ி. ச ி. யிடம் கல்வி நிறுவனங்கள் பெறும் நிதியுதவிகள் நிறுத்தி வைக்கப்படும். அந்த கல்லூரிகள் தகுதி இல்லாதவை என்று அறிவிக்கப்படும்.

புகார் சொல்ல 24 மணி நேர போன் சேவை : யு.ஜி.சி சார்பில் 'எட்சில ்' இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம், கடந்த ஜூன் 20ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 1800-180-5522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ரா‌க்கிங் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் helpline@antiragging.net. எ‌ன்ற இணையதள‌ம் மூல‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌க்கலா‌ம்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments