Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமேஸ்வரத்தில் தொடர் மழை:5,000 வீடுகளில் வெள்ளம்

ராமேஸ்வரத்தில் தொடர் மழை:5,000 வீடுகளில் வெள்ளம்
ராமேஸ்வரம் , ஞாயிறு, 27 நவம்பர் 2011 (13:02 IST)
ராமேஸ்வரத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில்,புயல் எச்சரிக்கை காரணமாக 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை,புயல் சின்னமாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகததில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி, தேவிபட்டிணம், திருப்புல்லாணி, சேதுகரை, காஞ்சிராங்குடி, கீழகரை, ஏர்வாடி போன்ற பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இன்று கடல் அமைதியாக இருந்தது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடல் அமைதியாக காணப்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என மீனவர்கள் கருதுகிறார்கள்.

ராமேஸ்வரம் எம்.ஆர்.சத்திரத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் நடராஜபுரம் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வெள்ளக்காடாக காணப்படுகிறது.பலத்த மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.

இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரோடு, பாரதி நகர், கலெக்டர் அலுவலக பகுதியில் மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்தது.

இதனால் மின்தடை ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கண்மாய்கள் 640-ம், ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் 2776-ம் உள்ளது. மொத்தம் 3416 கண்மாய்களில் 263 கண்மாய்கள் நிரம்பி வழிகிறது. 238 கண்மாய்கள் 75 சதவீதமும், 474 கண்மாய்கள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளது.

சிவகங்கை தாலுகாவில் 12 வீடுகளும்,திருப்பத்தூர் தாலுகாவில் 9 வீடுகளும், தேவகோட்டை தாலுகாவில் 2 வீடுகளும், மானாமதுரை தாலுகாவில் 9 வீடுகளும் மொத்தம் 32 வீடுகள் மழைக்கு சேதம் அடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil