Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி மகள் படத்துக்கு எதிராக ‌மீ‌ண்டு‌ம் வழக்கு

ரஜினி மகள் படத்துக்கு எதிராக ‌மீ‌ண்டு‌ம் வழக்கு
சென்னை , வியாழன், 28 ஜனவரி 2010 (09:10 IST)
WD
நடிகர் ரஜினிகாந்த் மகள் தயாரித்துள்ள 'கோவா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌‌ல் ‌மீ‌ண்டு‌ம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகரை சேர்ந்த கமலேஷ் கோத்தாரி, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் பைனான்ஸ் மற்றும் பல்வேறு தொழில்களை கடந்த 7 ஆண்டுகளாக செய்து வருகிறேன். 'கோவா' படம் தயாரிப்பது தொடர்பாக இய‌‌க்குநர் வெங்கட்பிரபு மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் என்னை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்தனர்.

அப்போது, இந்த படத்தை தயாரிப்பதற்கு ரூ.2 கோடி கடன் வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 'கோவா' படத்தை திரையிடுவதற்கு முன்பு கடன் தொகையை ரூ.2 கோடியுடன் அதற்கான 'ராயல்டி' தொகை ரூ.30 லட்சத்தை சேர்த்து கொடுத்துவிடுவோம் என்று கூறியிருந்தனர். அதற்கான ஒப்பந்தம் 14.10.2009 அன்று எங்களிடையே கையெழுத்தானது. ரூ.2 கோடியை அக்டோபர் மாதத்தில் பல்வேறு தேதிகளில் படிப்படியாக கொடுத்தேன்.

இந்த நிலையில், 'கோவா' படத்தை 29ஆ‌ம் தேதி (நாளை) வெளியிடப்படுவதாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் வந்துள்ளன. ஆனால், இதுவரை கடன் தொகையை திருப்பி தரவில்லை. ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படவில்லை. என்னை ஏமாற்றும் நோக்கில் அவர் செயல்படுகிறார்.

எனவே, எனக்கு ஒப்பந்தப்படி கொடுக்கவேண்டிய ரூ.2 கோடியே 30 லட்சத்தை தராத நிலையில், 'கோவா' படத்தை திரையிட அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் எனது தொழிலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, எனக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்தை சவுந்தர்யா வழங்க உத்தரவிட வேண்டும். அதற்கான 24 சதவீத ஆண்டு வட்டியையும் அவர் சேர்த்து தர உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் செலவையும் அவரே வழங்க உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் மு‌ன்‌னிலை‌யி‌ல் ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது, சவுந்தர்யா தரப்பில் வழ‌க்‌க‌றிஞ‌ர் ஹரிசங்கர் ஆஜராகி த‌ா‌க்‌கீதை பெற்றுக்கொண்டார். இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil