Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்சாரம் தயாரிக்க பொறியியல் மாணவர்களு‌க்கு அமைச்சர் அ‌றிவுரை

ஈரோடு ச‌ெ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

மின்சாரம் தயாரிக்க பொறியியல் மாணவர்களு‌க்கு அமைச்சர் அ‌றிவுரை
, திங்கள், 16 ஜூலை 2012 (16:05 IST)
webdunia photo
WD
பொறியியல் படிக்கும் மாணவர்கள் காற்று, நீர், சூரிய ஒளி ஆகியவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆர்வம் காட்டவேண்டும் என தமிகழத்தின் உயர்கல்வி துறை அமைச்சர் பி.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லõரியில் 12 வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வாழத்துரை வழங்கினார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்துகொண்டு விழா பேரூரையாற்றினார். அப்போது அவர் பேசுகை‌யி‌ல், ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு படிக்கவேண்டும் என்றால் அண்டை மாநிலமோ அல்லது அண்டை நாட்டிற்கோ செல்லவேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் அண்டை மாநிலம் மற்றும் நாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் பொறியியல் படிப்பு படிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.

உலகளவில் பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாகும். ஆனால் தமிழகத்தில் தற்போது பொறியியல் படிப்பவர்கள் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. இதை உயர்த்த முதல்வர் ஜெயலலிதா விஷன் 2023 என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் படித்து முடித்துவிட்டு வேலைபார்க்க வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும்.

''எம்.ஜி.ஆர். பாடியதைபோல் என்னவளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்'' என்பதை உணரவேண்டும். பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகள் இயற்கைகளை காப்பது மட்டுமின்றி சூரிய ஒ‌ளி, காற்று மற்றும் நீரில் இருந்து மின்சாரம் தாயரிக்க ஆர்வம்காட்ட வேண்டும் எ‌ன்றா‌ர் அமைச்சர் பழனியப்பன்.

பி‌ன்ன‌ர் விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1148 பேருக்கு அமைச்சர் பி.பழனியப்பன் பட்டம் வழங்கினார். விழாவிற்கு கல்லூரி இயக்குனர் எஸ்.கே.சுந்தரரமான் முன்னிலை வகித்தார். பட்டமளிப்பு விழா குறித்து கல்லõரியின் முதன்மை அலுவலர் முனைவர் ஏ.எம்.நடராஜன் பேசினார். இறுதியில் கல்லு‌ரி முதல்வர் முனைவர் ஏ.சண்முகம் நன்றி கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பி.எல்.சுந்தரம், பி.ஜி.நாராயணன், எஸ்.எஸ்.ரமணிதரன், தோப்பு வெங்கடாசலம் மற்றும் முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் டி.கே.கார்த்திகேயன், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிர்வாக இயக்குனர் பி.சரவணன், நிர்வாக மேலாளர் பிரவின், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியின் செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி, ஈரோடு மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தியமங்கலம் நகரமன்ற தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், பிரசன்னா கேஸ் உரிமையாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil