Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாயமான மாணவியை செல்போனை வைத்து மீட்ட சென்னை போலீஸ்!

மாயமான மாணவியை செல்போனை வைத்து மீட்ட சென்னை போலீஸ்!
, செவ்வாய், 23 ஜூலை 2013 (18:08 IST)
சென்னையைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாயமானார். பெரும் புதிராக இருந்த விவகாரத்தில் மூளையுடன் செயல்பட்ட போலீஸார் செல்போன் தொடர்புகளை வைத்து மாணவியை மடக்கிப் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

10ஆம் வகுப்பு படிப்பதால் தினமும் படி படி என்று பெற்றோர் நச்சரித்ததால் வெறுப்படைந்த அவர் சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டார்.

காணாமல் போன மகளை கண்டுபிடிக்க முடியாமல் பெற்றோர் போலீசின் உதவியை நாடினர். மாணவியின் செல்பேசி தொடர்புகளை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இதன் மூலம் மாணவி நாகூரில் இருப்பதாக தகவல் கிட்டியதும் அங்கு விரைந்தனர் போலீசார். ஆனால் அங்கிருந்து மாணவி எப்படியோ மீண்டும் தப்பி வேறொரு இடத்திற்கு சென்று விட்டது தெரிந்தது.

தொடர்ந்து செல்போன் தொடர்புகளை வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. கோவை, கோவளம், குன்னூர் என்று அந்த மாணவி இலக்கில்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.

செல்போன் எண்களை வைத்து.....

மாணவி தொடர்பு கொண்டு பேசிய நண்பர்களிடம் விசாரித்தனர். அவர்கள் மாணவி தங்களுடன் பேசியது உண்மை என்றும் ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவைல்லை என்றும் கூறினர்.

இந்நிலையில் மாணவியின் நண்பர் ஒருவர் போலீசில் தகவல் தெரிவிக்கும்போது மாணவி கோவையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு வருவதாக கூறினார்.

சென்னை வந்ததும் சிங்கப்பூருக்குச் செல்ல திட்டமிட்டதாகவும் அந்த நண்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

மேலும் மாணவி பதிவு செய்யப்படாத பெட்டியில் வருவதாகவும் போலீசுக்கு அதே நண்பர் தகவல் தெரிவிக்க, அடையாளம் காண பெற்றொருடன் சென்ட்ரலில் போலீஸ் காத்திருந்தது.

ஆனால் வேறு ரெயில் நிலையத்தில் இறங்கி விட்டால்? இதனால் தாம்பரம், பெரம்பூர், எழும்பூர் என்று போலீஸ் குழு அந்த மாணவிக்காக காத்திருந்தனர். இந்த ரெயில் நிலையங்களிலும் மாணவியின் உறவினர்கள் அடையாளம் காட்ட போலீசுடன் காத்திருந்தனர்.

நேற்று காலை அந்த மாணவி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கியபோது அடையாளம் கண்ட போலீஸ் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பின்னர் மாணவியை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil