Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2014 (15:04 IST)
FILE
டெல்லி மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, ஜனநாயகத்தை மீட்டெடுக்க திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளோம். டெல்லி மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.வும் அவருக்கு ஓட்டு போடுவோம்.

எனக்கும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் இடையே உள்ள பிரச்சனை கட்சி விவகாரம் ஆகும். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்.

புதிதாக அறிவிக்கப்பட்ட 12 ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை ரத்து செய்யனும். இதை வலியுறுத்தி 6-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம்.

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை கருணாநிதி தான் முடிவு செய்வார். திருச்சி திமுக மாநாட்டில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோவையில் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 1000 வாகனங்களில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம் என்று அவர் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments