Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொன்று, உடலை சாக்குமூட்டையில் கட்டிய கணவர்

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2014 (09:53 IST)
FILE
திருமணமான 5 மாதத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் பிணம் சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. தலைமறைவான அந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் போடி நகர் பெரிய பள்ளிவாசல் கிழக்கு சந்துவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போடி போலீசார் வீட்டின் உள்ளே சென்றனர். அங்கு ஒரு சாக்கு மூடையில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. அந்த மூடையை பிரித்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் ஒரு பெண் பிணம் இருந்தது.

அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சாக்குமூடையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அடையாளம் காண முடியாத அளவிற்கு அந்த பெண்ணின் உடல் சிதைந்திருந்ததால் அவர் இறந்து எப்படியும் 4 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். விசாரணைக்கு பின்னர் பெண்ணின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:-

சம்பவம் நடந்த அந்த வீட்டில் தேவாரம் அருகே உள்ள மறவாபட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) மற்றும் அவருடைய மனைவி கணபதி (20) ஆகியோர் குடியிருந்தனர். மணிகண்டன் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கணபதி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகில் உள்ள வட்டவடை கிராமத்தை சேர்ந்தவர்.

மணிகண்டனுக்கும், கணபதிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 9 ½ பவுன் தங்க நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அந்த நகைகளை மணிகண்டன் அடகு வைத்து செலவு செய்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சனையில் கணபதி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணபதியின் பெரியம்மா அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது மணிகண்டன் அவரை வீட்டின் உள்ளே செல்ல விடாமல் வெளியிலேயே நிறுத்தி பேசி அனுப்பி விட்டார். அதன்பிறகு மணிகண்டனை காணவில்லை. இதனால் மணிகண்டன் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான மணிகண்டனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments