Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும்: பசும்ப்பொன்னில் ஜெயலலிதா பேச்சு

மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும்: பசும்ப்பொன்னில் ஜெயலலிதா பேச்சு
, ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (16:10 IST)
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திரு உருவச் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் அணிவித்தார்.
FILE

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது:- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அதிமுக சார்பில் அணிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். மேலும் அகில இந்திய பார்வடு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தார் மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடுபட்டார்.

வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம் என்று குறிப்பிட்டவர் தேவர் திருமகன். அவரது பொன்மொழிகள் இக்காலத்துக்கும் பொருநத்தமாக உள்ளன.

ஆன்மீகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை அவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளைத்தான் அதிமுகவும் பின்பற்றி வருகிறது. பொதுமக்களாகிய உங்களுடைய ஆதரவுடன் பசும்பொன் முத்துராங்கலிங்க தேவரின் கொள்கைகளை வென்று எடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய பொதுமக்களாகிய நீங்கள் என்றென்றும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.

முன்னதாக பசும்பொன் வந்து சேர்ந்த ஜெயலலிதா. முத்துராமலிங்க தேவரின் நினைவு இடத்துக்கு சென்று கோவை காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் சுவாமிகளிடம் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஒப்படைத்தார். அவர் தங்க கவசத்தை முத்துராமிலங்க திரு உருவ சிலைக்கு அணிவித்து தீபாராதனை காட்டி முதல்வருக்கு பிரசாதம் வழங்கினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil