Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் முடிந்த பிறகும் தமிழ் மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை : கனிமொழி வேதனை

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (09:54 IST)
'' இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்குள்ள தமிழ் மக்களின் கஷ்டங்கள் தீரவில்லைய ே'' என்று ‌ தி.மு.க. மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொழி வேதனையுடன் பேசினார்.

மாநிலங்களவையில ், குடியரசுத ் தலைவர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் மீதா ன விவாதத்தில ் பங்கேற்ற ு அவர் ப ேசுகை‌யி‌ல், நாடாளுமன் ற, சட்டப்பேரவைகளில ் பெண்களுக்க ு 33 சதவீ த இடஒதுக்கீட ு அளிக்கும ் மசோத ா 100 நாளில ் நிறைவேற்றப்படும ் எ ன குடியரசுத ் தலைவர ் உரையில ் அறிவித்துள்ளதற்க ு எனத ு நன்றிய ை தெரிவித்துக ் கொள்கிறேன ். ஆனால், அந்த மசோதாவிற்கு ஏற்கனவே பல தடைகள் இருக்கின்றன.

இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த மசோதாவிற்கு தி.மு.க. உறுதியான ஆதரவு அளித்து உறுதுணையாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் தற்போது 58 மகளிர் மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு வருத்தமான நிலை இருக்கிறது. இது 10 சதவீதம் மட்டும் ஆகும். மா‌நில‌ங்களவ ையில் 22 பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது 9.6 சதவீதம்தான்.

எனவே, நமது கொள்கை முடிவுகள் எடுக்கும்போது 50 சதவீதம் இருக்கும் பெண்கள் விடுபட்டுவிடாத வகையில் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக குடியரசுத ் தலைவர ் உரையில் பெண் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் மற்றொரு பிரிவான அரவாணிகளும் புறக்கணிக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் அவர்கள் எல்லா வகையான பாகுபாடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.

எனவே, அரசு அவர்களுக்கு உரிமையுள்ள குடிமக்களுக்கான அங்கீகாரம் அளிக்க வேண்டும். அரசு திட்டத்தின் பலன்கள் அவர்களுக்கும் போய் சேர வேண்டும். தேவைப்பட்டால் அரவாணிகளுக்கு தனியாக ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

சேத ு சமுத்திரம ் கால்வாய ் திட்டம ் தமிழர்களின ் 150 ஆண்ட ு கா ல கனவ ு. இதன ் மூலம ் 2 லட்சம ் பேருக்க ு வேலைவாய்ப்ப ு கிடைக்கும ். இ‌ந்த திட்டம் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டம் ஆகும். கடலோரப் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் வரும். துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். எனவே, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது தமிழகத்திற்கும், தென்னகத்திற்கும் அநீதி இழைப்பதாகும். பொருளாதா ர வளர்ச்சிய ை ஏற்படுத்தும ் இத்திட்டத்த ை விரைவில ் நிறைவேற் ற நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

நதிநீர ் பிரச்னைகளால ் அதிகம ் பாதிக்கப்பட் ட மாநிலம ் தமிழ்நாட ு. எனவ ே நதிகள ை இணைக்கவும ், மாநிலங்களின ் நதிநீர ் உரிமைகள ை பாதுகாக்கவும ் உரி ய நடவடிக்க ை எடுக்கப்ப ட வேண்டும ்.

இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்துவிட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சமகுடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.

இப்போதை ய சூழ்நிலையில ் இலங்கைத ் தமிழர்களுக்க ு உரி ய உரிமைகளைப ் பெற்றுத ் த ர வேண்டி ய தார்மி க கடம ை இந்தி ய அரசுக்க ு உள்ளத ு. எனவ ே தமிழர்கள ் தங்கள ் பூர்வீ க மண்ணில ் மீண்டும ் குடியமர்த்தப்படவும ், அவர்களுக்க ு அரசியல ் உரிம ை உள்ப ட எல்லாவி த உரிமைகளும ் கிடைத்திடவும ் இந்தி ய அரச ு உரி ய நடவடிக்கைள ை விரைவில ் மேற்கொள் ள வேண்டும ் என்று கனிமொழி பே‌சினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments