போராட்டம் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எப்போது?

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (07:39 IST)
கடந்த வாரம் முதல் 9 நாட்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் செய்ததால் வழக்கமாக நேற்று அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் வழங்கப்படவில்லை. 31ஆம் தேதி வழங்கவேண்டிய சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு கருவூல அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனால் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவது எப்போது? என்ற கேள்வி எழுந்தது

இந்த நிலையில் இம்மாதம் அதாவது பிப்ரவரி 4 ந்தேதிக்கு பின்னரே அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பங்கு கொள்ளாத காவல்துறை அமைச்சகப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து துறையினர்களுக்கும் ஜனவரி மாத சம்பளம் தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் போராட்டம் நடத்திய நாட்களில் போராட்டம் செய்த ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என்பதால் எந்தெந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் எத்தனை நாள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்த கணக்கெடுப்பை கருவூல அதிகாரிகள் எடுத்து வருவதாகவும், இந்த பணிகள் முடிந்தபின்னரே அனைத்துதுறை ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments