Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வாங்க கடைசி நாள் மே 30

Webdunia
ஞாயிறு, 24 மே 2009 (15:21 IST)
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைக் பெற மே 30ஆம் தேதி கடைசி நாள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள ், அரசு பொறியியல் கல்லூரிகள ், அரசு உதவி பெறும் கல்லூரிகள ், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழக மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடித்து வினி யோகிக்கப்படுகிறது.

நேற்று வரை ஒரு லட்சத்து 53 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செயலாளர் ரைமண்ட் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாணவர்களுக்கு எளிதாகவும், தட்டுப்பாடு இல்லாமலும் விண்ணப்பங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும்.

கடைசி நேரம் வரை கூட விண்ணப்பம் இல்லை என்று கூறாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 31ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை வரை சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

இதற்காக 15 கவுண்ட்டர்கள் செயல்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் விண்ணப்பங்களை 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கிய ஒரு வாரத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று ரைமண்ட் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments