புதிய தலைமைச் செயலக கட்டுமானம் - நீதிபதி ரகுபதி ‌விசா‌ரி‌க்‌கிறா‌ர்

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2011 (08:45 IST)
புதிய தலைமைச் செயலக கட்டுமானம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தலைவராக இரு‌ந்த ஓ‌‌ய்வு பெ‌ற்ற ‌நீ‌திப‌தி த‌ங்கரா‌ஜ் ‌வில‌கிய‌த்தை தொட‌ர்‌ந்து ‌ நீதிபதி ரகுபதி நியமிக்கப்பட ்டு‌ள்ளா‌ர்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கடந்த தி.மு.க. அரசு க‌ட்டிய புதிய தலைமைச் செயலகம ், சட்டசப ையை ஆட்சி மாற் ற‌த்து‌க்கு பிறகு, அ.தி.மு.க. அரசு அந்த கட்டிடத்தை பயன்படுத்த மறுத்துவிட்டது.

மேலும், புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் முறைகேடு இருப்பதாக கருதி, அதுபற்றி விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த கமிஷனின் தலைவராக செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் நியமிக்கப்பட்டார். தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை கமிஷன் தலைமைப் பொறுப்பில் இருந்து தங்கராஜ் ‌ திடீரென விலகினார்.

அதைத் தொடர்ந்து தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்த விசாரணையை நடத்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌தி‌ம‌ன்ற‌த்த‌ி‌ன் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

Show comments