Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய தலைமுறை ,எஸ் ஆர் எம் அலுவலகங்களில் IT ரெய்டு!

புதிய தலைமுறை ,எஸ் ஆர் எம் அலுவலகங்களில் IT ரெய்டு!
, செவ்வாய், 18 ஜூன் 2013 (13:11 IST)
FILE
எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் உள்பட அதன் அனைத்து நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்திற்கு இன்று காலை 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து சோதனையில் ஈடுப்பட்டனர்.

இந்த சோதனையின் போது யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி வழங்கவும் மறுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குள்ள மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், விடுதிகள் அனைத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil