Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.ஏ.பி.எல் கல‌ந்தா‌ய்வு 31ஆ‌ம் தே‌தி தொட‌க்க‌ம்

Webdunia
சனி, 18 ஜூலை 2009 (09:16 IST)
சட்டக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 31 ஆம் தேதி தொடங்குகிறது எ‌ன்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில ், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மூலம் சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 3 ஆண்டு, 5 ஆண்டு படிப்பில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. 5 ஆண்டு பி.ஏ.பி.எல் சேர்க்கைக்கு கட்ஆப் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி முதல் கட்ட கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 31 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 3ஆம் தேதி முடிகிறது.

மாணவர்களுக்கு 2 நாட்களில் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். அழைப்பு கடிதம் கிடைக்காதவர்கள், சேர்க்கை குழு தலைவரை நேரிலோ, தொலைபேசியிலோ அணுகலாம். கல‌ந்தா‌ய்வு வரும் மாணவர்கள், அசல் சான்றுகள், பல்கலைக்கழக கட்டணத்துடன் வரவேண்டும்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 241 இடங்கள், மதுரை சட்டக் கல்லூரி 171, திருச்சி சட்டக் கல்லூரி 160, கோவை சட்டக் கல்லூரி 160, திருநெல்வேலி சட்டக் கல்லூரி 160, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி 160 என மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன.

தரவரிசைப் பட்டியலில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு 31ஆம் தேதி இடஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்படும். அதன்பின் அனைத்து பிரிவினருக்கான கல‌ந்தா‌ய்வு நடக்கும ்.

ஜூலை 31 காலை 9.30 ம‌ணி‌ முத‌ல் ம‌திய‌ம் 3 வரை பொதுப் பிரிவ ு‌க்கு‌ம், ஆகஸ்ட் 1 ஆ‌ம் தே‌தி காலை 9.30 ம‌ணி முத‌ல் 10 ம‌ணி வரை பழங்குடியி னரு‌க்கு‌ம், 10 ம‌ணி‌ முத‌ல் 10.30 வரை அரு‌ந்த‌தி‌யினரு‌க்கு‌ம், ஆகஸ்ட் 2 ஆ‌ம் தே‌தி காலை 9.30 ம‌‌ணி‌க்கு ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட் வகு‌ப்‌பினரு‌க்கு‌ம் ( முஸ்லிம்), 10 ம‌ணி‌க்கு ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு‌ம், ஆகஸ்ட் 3 ஆ‌ம் தே‌தி காலை 9.30 ம‌ணி‌க்கு ‌மிகவு‌ம் ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு‌ம் கல‌ந்தா‌ய்வு நடைபெறு‌கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments