Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோ‌ரி வழ‌க்கு

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (10:27 IST)
WD
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோ‌ரி மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் எ‌ன்பவ‌ர் தாக்கல் செய்துள்ள மனுவில ், கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வில் நானும் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன். ஒவ்வொரு தேர்வுக்கான கேள்விகளுக்கும், விடைகள் தனியாக தயாரிக்கப்பட்டு தேர்வுத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும். தற்போது தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

இயற்பியல் தேர்வுக்கான விடைகளில் ஒரு மதிப்பெண் கேள்வியான 10-வது கேள்விக்கான விடை, 5 மதிப்பெண் கேள்வியான 60-வது கேள்விக்கான விடை, 10 மதிப்பெண் கேள்வியான 68-வது கேள்விக்கான விடை ஆகியவை தவறாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசு தேர்வுத்துறை தனது கடமையை சரியாக செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

தவறான விடைகளை கொண்டு இயற்பியல் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தினால் 25 சதவீத மாணவர்கள் தோல்வி அடையும் நிலை ஏற்படும். எனவே இயற்பியல் தேர்வில் கேள்வி எண்கள் 10, 60, 68 ஆகியவற்றுக்கான விடைகள், தேர்வுத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு சரியாக அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

சரியான விடைகளை அளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை இயற்பியல் தேர்வுத்தாள்களை திருத்தவும், பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர ு‌கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments