Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாதத்தில் மயக்க மருந்து: இளம்பெண்ணை கடத்த முயன்ற போலிசாமியாருக்கு தர்ம அடி!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (10:09 IST)
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முஅய்ன்ற போலி சாமியாருக்கு பொதுமக்கள் சக்கையாக தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது பெரியகுளம் என்ற கிராமம். இந்த கிராமம் மலை அருகே வனப்பகுதியையொட்டி உள்ளது.

இங்கு தோவாளய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை வழக்கம்போல் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் ஒரு சாமியார் அங்கு வந்தார்.

வந்தவுடன் சிறப்பு பூஜை செய்யவேண்டும் என்றார். ஊர் மக்களும் அனுமதி கொடுத்தனர். பூஜை முடிந்ததும் அங்கு இருந்த பக்தர்களுக்கு அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார்.

அதே பகுதியை சேர்ந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி மற்றும் மணி, இவரது மனைவி ரத்தினால் மற்றும் இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் ஆக 5 பேரும் கோவிலுக்கு வந்திருந்தனர். இவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் பிரசாதத்தை அந்த சாமியார் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதன் பிறகு அந்த போலி சாமியார் அவர்களுடன் வந்த இளம்பெண்ணை கடத்த முயன்றார். தன்னை கடத்த முயற்சி நடப்பதை அறிந்த அந்த இளம்பெண் கூக்குரலிட்டாள். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அப்போது அந்த இளம்பெண்ணை சாமியார் வலுக்கட்டாயமாக கடத்த முயன்றதை கண்டு திடுக்கிட்டனர். போலி சாமியாரை கையும்-களவுமாக பிடித்த பொதுமக்கள் கோவில் உள்ளேயே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயற்சித்த அவருக்கு `தர்மஅடி' கொடுத்தனர். பிறகு அந்த போலி சாமியாரை பொதுமக்களும், பக்தர்களும் சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார் பெயர் உத்தமராஜ் என்றும், கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments