Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாமகவை தடை செய்ய வேண்டும் - கிருஷ்ணசாமி

பாமகவை தடை செய்ய வேண்டும் - கிருஷ்ணசாமி
, வெள்ளி, 26 ஏப்ரல் 2013 (18:15 IST)
FILE
பாமகவினர் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டு அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள், வீடுகள், கடைகள் உட்பட பலவற்றை எரித்து சாம்பலாக்கினர். மேலும் அங்கு உள்ள காலனி பகுதியில் உள்ள மக்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இது குறித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பாமகவை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், தேமுதிக, கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்டு மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து பாமகவினர் நடத்திய மாநாட்டினால் பெரிய வன்முறை நடந்தது தொடர்பாக நாங்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளதாகவும், அது பற்றி சட்ட சபையில் விவாதம் செய்யவேண்டும் என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், இன்று காலைதான் அந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தனக்கு கிடைத்ததாகவும், அது பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது, மகாபலிபுரத்தில் பாமகவினர் வன்னிய இளைஞர் பெருவிழா ஒன்றை நடத்தினார்கள். அதில் ராமதாஸ், காடுவெட்டு குரு மற்றும் பேசிய அனைவரும் தாழத்தப்பட்டவர்களுக்கு எதிராக பேசினார்கள்.

ஜனநாயகத்தை மீறி அரசியல் சாசனத்தை மீறி வன்முறையை தூண்டிவிடுகிற வகையில் அவர்களின் பேச்சு இருந்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல், மரக்காணத்தில் மிகப் பெரிய கலவரத்தை நடத்தி இருக்கிறார்கள். தாழத்தப்பட்டவர்களின் வீடுகள் சூரையாடப்பட்டிருக்கின்றன. இவ‌ர்க‌ள் வ‌ந்த வாகன‌ம் மோ‌தி ஒரு க‌ல்லூ‌ரி மாணவ‌ர் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளா‌ர். பேருந்துகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் பெரிய கலவரம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே பாமகவை தடை செய்ய வேண்டும். இந்த முக்கிய பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்திருக்கிறோம்.

பதில் சொல்ல வேண்டிய முதல்வர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. அதனால் அதை சபாநாயகர் எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். திங்கள்கிழமை மீண்டும் இந்த பிரச்சனையை எழுப்புவோம். அரசு தரப்பில் சொல்லப்படுகிற பதிலை பொருத்து எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil