Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவானி ஆற்றுப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு: முதல்வர் நேரடியாக தலையிட தா.பாண்டியன் வேண்டுகோள்

பவானி ஆற்றுப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு: முதல்வர் நேரடியாக தலையிட தா.பாண்டியன் வேண்டுகோள்
, புதன், 1 ஜனவரி 2014 (16:30 IST)
ஈரோடு: பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாய கிணறுகளில் மின்சார வாரியம் மின் இணைப்பு துண்டிப்பு குறித்து தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என இந்திய கம்யூனினிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
FILE

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதிகளில் பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாய கிணறுகளில் நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் பொதுப்பணித்துறை மற்றும் மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு துண்டிப்பு செய்தல் இதைய எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டம் மற்றும் தீ குளிக்க முயற்சி போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் ஒன்றான சத்தியமங்கலம் அருகே <உள்ள வெள்ளியம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் பார்வையிட்டார். இவருடன் இக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஆறுமுகம், பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம், இந்திய கம்யூனிட்கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன், விவசாய பிரதநிதிகள் சின்னராஜ், ரத்தினசாமி உள்ளிட்டோரும் உடன்சென்றனர்.

பவானி ஆற்றின் ஓரம் உள்ள விவசாய கிணறுகளை பார்வையிட்ட பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:

இந்தியாவில் உணவு தட்டுப்பாட்டை நீக்க இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின்போது பெரிய அணைகள் கட்டப்பட்டது. உணவு உற்பத்தியை முதன்மையாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை மறந்து வேறுவிதமான நடவடிக்கை தற்போது எடுத்து வருகின்றனர். பவானி ஆற்று பகுதியில் தண்ணீர் ஓடும் பகுதி பள்ளமாகவும் விவசாய நிலம் உள்ள பகுதி மேட்டு பகுதியிலும் உள்ளதால் நிலத்தடி நீர் பிரச்சனை ஏற்படுவதால் விவசாயிகள் ஆற்றின் கரையோரத்தில் கிணறுவெட்டி விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கின்றனர்.

இந்த தண்ணீரை எடுத்து பாட்டிலில் அடைத்து விற்பது இல்லை. விவசாயம் செய்து உணவு உற்பத்தியை பெருக்குகின்றனர். புஞ்சை நிலங்களை நஞ்சை நிலங்களாக மாற்றுகின்றனர். நாற்பது ஆண்டுகளாக மண்ணை பொன்னாக்கி வருகின்றனர். தற்போது பவானி ஆற்றில் கீழ்பகுதி விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் மின் இணைப்பு துண்டிப்பு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவில் மின் இணைப்பை துண்டிக்க உத்திரவிடவில்லை. மாறாக அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லித்தான் அறிவுருத்தியுள்ளனர். இந்த பிரச்சனை பவானி ஆறு மட்டுமின்றி அமராவதி, காவேரி வைகை போன்ற ஆறுகளிலும் உள்ளது. இரண்டு முதல்வர்களை கண்ட ஆண்டிப்பட்டியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டபோது தன்னை வெற்றிபெற செய்தால் அரசிபட்டியாக மாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.

தற்போது ஆண்டிப்பட்டி அப்படியே மாறி வளமாக மாறியுள்ளது. வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அணையில் கலக்கும் முன்னே விவசாயிகள் எடுத்து பாசனத்திற்காக பயன்படுத்தி வருவதற்கு அரசு அனுமதித்துள்ளது. இதனால் ஆண்டிப்பட்டியில் எங்கு பார்த்தாலும் பசுமையாக காணப்படுகிறது.

கீழ்பகுதி விவசாயிகள் தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட கூடாது. இதற்காக தமிழக முதல்வர் கெயில் பிரச்சனையை கையாண்டதுபோல் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு தற்போது மின் துண்டிப்பு பிரச்சனையை நிறுத்தி வைக்கவேண்டும்.

அடுத்து விவசாய பிரதநிதிகள், கீழ் மடை விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் இணைந்து இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை செய்து யாரையும் பாதிக்காமல் நல்ல முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் சொட்டு நீர் பாசனத்திற்கு அரசு முக்கியதுவம் கொடுக்க வேண்டும். இந்திய நாடு ராணுவத்திற்காக 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் சில கோடி ரூபாய் சொட்டு நீர்பாசனத்திற்கு ஒதுக்கி ஏக்கர் வரம்பு இல்லாமல் மானியம் வழங்கவேண்டும் என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil