Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக அதிகரிப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2011 (12:40 IST)
webdunia photo
WD
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர். இங்குள்ள அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், க ூடல ூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

கடந்த சில மாதங்களாக நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு சொற்ப அளவில் தண்ணீர் வந்தது.
அதேசமயம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கீழ்நோக்கி சென்றது. இதனால் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிர ி, கூ டல ூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முனுஞூ வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை எட்டு மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு ஆறாயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் 82 அடியாக அதிகரித்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments