Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌‌மி

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2011 (10:28 IST)
webdunia photo
WD
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆற்றிலும், மோயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தத ு/ இன்று காலை எட்டு மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7135 கனஅடி தண்ணீர் வந்தது.

ஈரோடு மாவட்டத்திலும் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 120 அடியாகும். இதில் சகதி 15 அடியை கழித்து நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 86.58 அடியாக உள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments