Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழங்குடியினர் வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம்

பழங்குடியினர் வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம்
, வியாழன், 21 மார்ச் 2013 (16:01 IST)
தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிசெய்ய பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ஜமுனாமரத்தூர், கொல்லிமலை, ஆனைகட்டி, பச்சைமலை, கல்வராயன் மலை ஆகிய இடங்களில் ஐந்து புதிய பல்தொழில்நுட்பப் பயிற்சி நிலையங்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பல்வேறு பிற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, மாநிலத்தில் சமூகநீதியை இந்த அரசு நிலைநாட்டியுள்ளது. இவர்களின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக, 764.43 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

2012-2013 ஆம் ஆண்டில், 28 புதிய மாணவர் விடுதிகள் திறக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டில் 64.48 கோடி ரூபாய் செலவில் 84 விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, 56 விடுதிகளுக்கு நபார்டு வங்கியின் நிதியுதவியுடன், 50.01 கோடி ரூபாடீநு செலவில் கட்டடங்கள் 65 கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு தேவையான இடங்களில் புதிய விடுதிகளை தொடங்குவதற்கும், அனைத்து விடுதிகளும் சொந்த கட்டடத்தில் இயங்க புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

இந்த அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி மேம்பாட்டிற்காக, மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. 2013-2014 ஆம் ஆண்டில் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணங்கள் உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகளுக்காக 173.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, 5,06,630 ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர உதவும். மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக, 139.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்திடத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. இப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்காக, 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 55.21 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டு, மானியமாக மூன்று கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் கிறித்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில், சிறுபான்மையினர் நலனுக்காக 60.39 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil