Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமையால் புதுவையில் பதற்றம்!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2013 (12:20 IST)
FILE
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் புதுவையில ் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனால் புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

டியூசனுக்கு சென்ற மாணவியை தனியார் பேருந்து நடத்துனர் முத்து மற்றும் அவரது நண்பர் வெங்கடாச்சலம் ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று ஒரு குடிசையில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

மாணவி மாயமானது பற்றி காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததே பலாத்காரத்திற்குக் காரணம் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

புதுவை அருகே உள்ள கொத்தபுரிநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் புத்தாண்டு அன்று டியூசனுக்கு சென்றுள்ளார். டியூசனுக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அப்போது திடீரென மாணவி விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து, தன் பெற்றோருக்குத் தொடர்பு கொண்டார்.

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கியிருந்த மாணவியை பெற்றோர் மீட்டு புதுச்சேரியிலுள்ள ராஜீவ் காந்தி மகளிர் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முத்து மற்றும் வெங்கடாச்சலம் ஆகியோரை காவல்துறையினர ் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறத ு.

மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சித்துள்ளார். 100 அடி சாலையில் மாணவியின் தந்தை நாகராஜ் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் இன்று காலையிலிருந்தே புதுச்சேரி மருத்துவமனை அருகில் மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும், மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் குவியத் தொடங்கினர். அந்தப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கல்லூரியைச் சார்ந்த மாணவர்களும் மாணவி உள்ள மறுத்துவமனை அருகே திரண்டுள்ளனர். கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் போராட்டம் அடங்குவதற்குள் புதுச்சேரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!