Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் இறக்கப்பட்டு அரசு பேருந்து ஜப்தி

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2013 (19:14 IST)
FILE
விருதுநகரில் பயணி கள ் பாதிவழியில் இறக் கப் பட்டு நஷ்ட ஈடு வழங்காததற்காக அரசுப் பேருந ்த ை இன்று ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்தனர்.

கோவில்பட்டி அருகே வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேதநாயகம்(60). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியில்-கழுகுமலைக்கு விவசாய பொருள்கள் வாங்குவதற்கு சென்றாராம். அங்கிருந்து திரும்பி கிராமத்திற்கு வருவதற்காக அரசு பஸ்ஸில் வழித்தடம் மாறி ஏறியுள்ளார். அதையடுத்து, கழுகுமலை புறப்பகுதியில் வேகத்தடையில் இறங்குவதற்கு முன்பாக பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவரது மனைவி மாரி, மகன்களான நியூட்டன், செல்வம், சாமுவேல், தேவி ஆகியோர் உள்ளிட்ட வாரிசுதாரர்கள் நஷ்டஈடு கேட்டு விருதுநகர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் வழக்கை விசாரணை செய்து கடந்த 22.7.2011 அன்று ரூ.2.66 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என சார்பு நீதிமன்ற நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்டு தாகூர் தீர்ப்பு வழங்கினார். இதுவரையில் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டஈடு தொகை வழங்காமல் தாமதம் ஆனாது.

அதன் அடிப்படையில் ராஜபாளையத்திலிருந்து -அருப்புக்கோட்டைக்கு அரசு பேருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இதில், நடத்துனராக கே.பாண்டியன் என்பவரும், ஓட்டுநராக பெருமாள்சாமியும் இருந்தனர். விருதுநகர் பாத்திமாநகர் நிறுத்தத்தில் ஆள்களை இறக்கி விட்டனர். அப்போது, நீதிமன்ற ஊழியர் சொக்கலிங்கம் என்பவரும் ஏறியுள்ளார். அவரிடம் பயணச்சீட்டு கேட்டததற்காக எடுக்க மறுத்து, பஸ்ஸை ஜப்தி செய்வதற்காக வந்திருப்பதாக கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டைக்கு 30 பயணிகள் பயணச்சீட்டு பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதற்கிடையே பேருந்து நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதைத்தான் ஜப்தி செய்வதாக கூறி விருதுநகர் பேருந்து நிலையத்தில் ஆள்களை இறக்கி விட்டு பஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு எடுத்துச் சென்று ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து நீதிமன்ற அலுவலர் ஒருவர் கூறுகையில், பொதுவாக விபத்து ஏற்படுத்திய பஸ்ஸை ஜப்தி செய்யும் போது பயணிகளுக்கு இடையூறு செய்யாமல், பேருந்து நிலையத்தில் நின்று இருக்கும் போது ஜப்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த பணிமனையைச் சேர்ந்த ஏதாவது ஒரு பேருந்தை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்கலாம். அரசு விதிமுறைப்படி நடப்பதால் வாகன முகப்பில் காரணத்துக்கான நோட்டீஸ் ஒட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments