Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு ராமதாஸ் எதிர்ப்பு

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2012 (15:24 IST)
பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைப்பதன் மூலம் மாநிலங்களின் உரிமையைப் பறிக்க வேண்டாம் என மத்திய அரசை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனித உயிர்களுக்கும ், தேசி ய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலா க திகழும் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்ற ு கருத்து இருக்க முடியாது. ஆனால் இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள ் கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் இருக்கக்கூடாது.

இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளின் அடுத்தக் கட்டமா க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்றும ், வரும் ஒன்றாம ் தேதி முதல் இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும் என்றும ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள் ள ஆணையின்படி பயங்கரவாத தடுப்பு மையத்தை நிர்வகிக்கும் மத்திய உளவுத்துற ை அதிகாரிகள ், யாரை வேண்டுமானலும் கைது செய்யலாம் என்ற ு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ ், ஒருவரை கைது செய்வதற்கா க மாநில உள்துறை செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இந்த ஆணையின் மூலம ் பறிக்கப்பட்டு மத்திய உள்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இத ு இந்திய அரசியல் சட்டத்தின்பட ி, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள் ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது.

இப்படியொரு சட்டத்தை பிறப்பித்திருப்பதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தின ் மீது பயங்கரவாத தாக்குதலை வி ட, மிகப்பெரிய தாக்குதலை மத்திய அரச ு நடத்தியுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கல்வ ி, நிதி என பொதுப் பட்டியலில் உள்ள அனைத்து துறைகளிலும் மத்திய அரச ு விருப்பம்போல திருத்தங்களை கொண்டு வந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறித்த ு வருகிறது.

உரிமைகளை பாதுகாக்க வேண்டிய மத்திய அரச ு, மாநிலங்களின் உரிமையை பறிப்பத ை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே கூட்டாட்சித ் தத்துவத்திற்கு எதிரான தேசி ய பயங்கரவாத தடுப்ப ு மையத்தை அமைப்பதற்காக மத்திய உள்துற ை அமைச்சகம ் பிறப்பித்துள்ள ஆணையை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலா க மாநி ல அரசுகளுடன் கலந்துபேசி அவற்றின் பங்கேற்புடன் கூடிய புதிய அமைப்ப ை ஏற்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments