Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்திரிக்கையாளர்களை தாக்கிய திமுகவினர் 11 பேர் புழல் சிறையில் அடைப்பு

பத்திரிக்கையாளர்களை தாக்கிய திமுகவினர் 11 பேர் புழல் சிறையில் அடைப்பு

Ilavarasan

, திங்கள், 19 மே 2014 (12:28 IST)
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டருகே பத்திரிக்கையாளர்களை தாக்கிய திமுகவைச் சேர்ந்த 11 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவலையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பத்திரிகையாளர்கள், டி.வி.சேனல் நிருபர்கள் செய்தி சேகரிக்க நேற்று குவிந்தனர்.
 
அங்கு திரண்டு இருந்த திமுக தொண்டர்கள் சிலர் செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். ஷபீர் அகமதுவும், பெண் நிருபர் ப்ரியப் வதாவும் தாக்கப்பட்டனர். அவர்களின் கேமரா மேன்களிடம் இருந்த கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
 
இதுபற்றி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஷபீர் அகமது, ப்ரியப் வதா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
 
தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் சரவணன், பத்திரிகையாளர்களை தாக்கிய 11 திமுகவினரை கைது செய்தார்.
 
அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
கைது செய்யப்பட்ட 11 பேரும் சைதாப்பேட்டை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூன் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டதையடுத்து 11 பேரும் இன்று காலை 6 மணிக்கு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரில் சிலர் திமுகவில் பொறுப்புகளில் உள்ளனர். மற்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
 
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
 
முரளி (30) இளைஞர் அணி செயலாளர்– காட்டுப்பாக்கம், பூந்தமல்லி.
 
அருள்தாஸ் (37), 111 ஆவது வட்ட இளைஞர் அணி செயலாளர்– ஆயிரம் விளக்கு.
 
கமலக்கண்ணன் (37). இளைஞர் அணி செயலாளர்– ஆயிரம் விளக்கு.
 
ஜெயபிரகாஷ் (33), இளைஞர் அணி செயலாளர்– திருவள்ளூவர் நகர், திருவான்மியூர்.
 
செந்தில் குமார், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர்– ஆயிரம் விளக்கு.
 
தேவகுமார் (43), ஆழ்வார்பேட்டை.
 
முருகன் (24), ஆழ்வார்பேட்டை.
 
அசோக் (26), காட்டுப்பாக்கம்.
 
ராஜேஷ் (31), காட்டுப்பாக்கம்.
 
வின்சென்ட் பாபு, 117 ஆவது வட்ட இளைஞர் அணி செயலாளர்– தியாகராயநகர்.
 
விநாயக மூர்த்தி, 119 ஆவது வட்ட இளைஞர் அணி செயலாளர்– தியாகராயநகர்.

Share this Story:

Follow Webdunia tamil