Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணாரி அம்மன் கல்லூரியில் ஃப்யூச்சரா 09 அறிவியல் கருத்தரங்கு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (16:07 IST)
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல ்ல ூரியில் இம்மாதம் இறுதியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல ்ல ூரியில் தேசிய அளவிலான அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி முடிவடைகிறது. இந்த கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஃப்யூச்சரா 09 என்றழைக்கப்படும் இந்த கருத்தரங்கில் முதலான 28ஆம் தேதி திருப்பூர், நாமக்கல், நீலகிரி, கோவை, சேலம், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 1200 பள்ளி மாணவ, மாணவிகள் பங்குகொள்ளும் பேச்சு போட்டி, வினாடி வினா, கட்டுரை, கவிதை மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெறுகிறது.

மேலும் இந்த பள்ளி மாணவர்களுக்கு திட்ட கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500 ம், இரண்டாம் பரிசாக ரூ.1500ம ், மூன்றாம் பரிசாக ரூ.1000 ம் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த பரிசுக்கான வெற்றி கோப்பையும் வழங்கப்படுகிறது.

மேலும் முதல்நாள் நிகழ்ச்சியில் சிறந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு செய்து அவருக்கு டாக்டர் எஸ்.வி.பி. நிறுவனர் விருதுக்கான ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.

விழாவின் தொடக்க நாளான 28ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த பரிசுகளை வழங்குகிறார்.அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு துணை தலைவர் பேராசிரியர் மன்தா ப்யூச்சரா 2009 கருத்தரங்கை துவக்கி வைக்கிறார். தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி இயக்குனர் மணி சிறப்ப ுர ையாற்றுகிறார்.

இந்த கருத்தரங்கில் 3228 ஆய்வு கட்டுரைகள் வந்ததில் 160 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 16 அமர்வுகளில் தொழில்துறை வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்படும். இதில் முதல் இரண்டு கட்டுரைகளுக்கு முறையே ரூ.2500 மற்றும் ரூ.1000 பரிசாக வழங்கப்படும்.

மேலும் திட்டவரைவு போட்டிக்காக 245 திட்ட வரைவுகள் வந்ததில் 93 திட்ட வரைவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்ட வரைவு இம்மாதம் 29 ஆ‌ம் தே‌தி முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும்.

இம்மாதம் 29 ஆ‌ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கல ்ல ூரியில் புதியதாக அமைந்துள்ள தொழில்நுட்ப வணிக அடைக்காப்பகத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் முருகேச பூபதி சிறப்புறையாற்றுகிறார ்.

ப்யூச்சரா 2009 யை முன்னிட்டு திறந்த வெளி கண்காட்சியும் கல ்ல ூரியில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி கடைசி நாளன்று மாலை 3 மணிக்கு மத்திய தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிறைவுரையாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். ஈரோடு மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் சுடலைகண்ணன் சிறப்புறையாற்றுகிறார். மேற்கண்ட தகவலை கல ்ல ூரியின் முதன்மை அதிகாரி டாக்டர் நடராஜன் மற்றும் முதல்வர் டாக்டர் சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments