Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்த்துப்போன அமெரிக்க தீர்மானம் - கருணாநிதி

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2013 (11:04 IST)
FILE
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா தெரிவித்த கருத்து திருப்தி அளிப்பதாக இல்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க.தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் அமெரிக்க தீர்மானத்தில் எவையெவை இடம்பெற வேண்டும் என்று எடுத்துச்சொன்னமோ, அறிவித்தமோ அவற்றில் எதுவுமோ இடம்பெறவில்லை என்றார்.

அதனால் இது நீர்த்துப்போன அமெரிக்க தீர்மானம் என்றுதான் சொல்லவேண்டும், குறிப்பிட்ட காலவரைக்குள் சுதந்திரமான விசாரணை நடைபெற்று அவற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம், அதை பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன் என்றார்.
மேலும் சோனியாகாந்திக்கு எழுதிய கடிதத்திலுமத் சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இனப்படுகொலை நடைபெற்றதை மூடி மறைக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டியதையும் கருணாநிதி நினைவு கூர்ந்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments