Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில அபகரிப்பு - நடிகர் வடிவேலு மனைவிக்கு நோட்டீஸ்!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2012 (14:03 IST)
FILE
காஞ்சிபுரம் மாவட்டம ் மணிமங்கலம் பகுதியில் புஷ்பகிரி உள்ளிட்ட இடங்களில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் சுமார் 150 ஏக்கர் நிலங்களை தனியார் பலர் ஆக்கிரமித்துள்ள விவகாரத்தில் நடிகர் வடிவேலு மனைவி உட்பட 19 பேருக்கு வருவாய்த்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்தப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர் 30 ஆண்டுகளாக அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை விவசாயிகள ், நடிகர்கள் உள்ளிட்ட தனியார்களுக்கு விற்று விட்டனர். ஆகவே அவர்கள் உடனடியாக காலி செய்து, இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக வடிவேலு மனைவி விசாலாட்சி உட்பட 19 பேரையும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று படப்பை வருவாய் அதிகாரி சின்னதுரை தலைமையிலான அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மொத்தம் உள்ள 200 ஏக்கரில் சுமார் 130 ஏக்கரில், இந்த 19 பேரும் பில் மா, தேக்கு, தென்னை ஆகியவற்றைப் பயிரிட்டு பண்ணைவீடுகள் அமைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது, புஷ்பகிரியில் கிட்டத்தட்ட 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை பலர் ஆக்கிரமித்து கடந்த 50 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். அரசின் தற்போதைய நடவடிக்கை மிகவும் கால தாமதமானது என்று கருத்துத் தெரிவித்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments