Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக‌ர் தனுஷ் படத்து‌க்கு தடை ‌நீ‌க்க‌ம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2011 (13:33 IST)
நடிகர் தனுஷ் நடி‌த்து‌ள்ள வேங்கை ப ட‌‌ம் வெளியிட ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட இடை‌க்கால தடையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌‌ம் ‌விள‌க்‌கியு‌ள்ளது.

நடிகர்கள் தனுஷ், தமன்னா நடித்து ஹரி இயக்கியுள்ள வேங்கை படத்துக்கு தடை கோ‌ரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஏக சக்கரா நிறுவனத்தின் இயக்குனர் கலைசெல்வம் வழக்கு தொ‌ட‌ர்‌ந்தா‌ர்.

அ‌தி‌ல், ' ஊலலல்லா' என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். 2வதாக 'வேங்கை' என்ற படம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ' வேங்கை' என்ற பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், தயாரிப்பாளர் கவுன்சிலிலும் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பரில் பதிவு செய்தேன்.

இந்நிலையில் அந்த ஆண்டில் செப்டம்பர் 28 ஆ‌ம் தேதி எனக்கு தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து தா‌க்‌கீது வந்தது. வேங்கை என்ற பெயரை ஏற்கனவே ஸ்ரீ புரடக்சன் நிறுவனம் பதிவு செய்துள்ளதாக அதில் கூறியிருந்தனர். இதற்கு நான் பதில் தா‌க்‌‌கீது‌ம் அனுப்பினேன்.

இந்நிலையில், தனுஷ், தமன்னா நடித்து, இய‌க்குன‌ர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேங்கை' என்ற பெயர் கொண்ட படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வெளியிட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எ‌ன்று மனுவில் க ூ‌‌றி‌யிரு‌ந்தா‌‌ர்.

இந்த மனு கட‌ந்த 25ஆ‌‌‌ம் தே‌தி ‌விசா‌ரி‌த்த நீதிபதி வி.ராமசுப்ரமணியம ், ' வேங்கை' என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித ்தா‌ர்.

இந்த நிலையில் வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, ' வேங்க ை' திரைப்படத்துக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments