Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27ஆ‌ம் தேதி மறு தேர்தல்

த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27ஆ‌ம் தேதி மறு தேர்தல்
, புதன், 9 நவம்பர் 2011 (09:40 IST)
க‌ள்ள ஓ‌ட்டு உ‌ள்பட பல்வேறு காரணங்களுக்காக த‌ள்‌ளிவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரு‌ம் 27ஆ‌ம் தேதி தேர்தல் நடைபெறு‌‌கிறது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அக்டோபர் 2011ல் நடைபெற்ற சாதாரண தேர்தலின் போது தேர்தல் நடவடிக்கை முடிவுறா நிலையில் வேட்பாளர் இறப்பு மற்றும் பிற காரணங்களுக்காக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட கீழ்க்கண்ட பதவியிடங்களுக்கு 27.11.2011 அன்று மறு தேர்தல் நடைபெற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சிகளில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் வார்டு எண்-1 உறுப்பினர் பதவியிடம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம் 18வது வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மதுரை மாநகராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவியிடம்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சி தலைவர் பதவியிடம், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியிடம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பேரூராட்சியின் 7வது வார்டு உறுப்பினர் பதவியிடம் ஆகியவற்றிற்கு கட்சி அடிப்படையிலான தேர்தல்கள் நடைபெறும்.

கட்சி அடிப்படையில்லாத தேர்தல்களை பொறுத்தவரை திருவள்ளூர் மாவட்டம், நத்தம்பேடு கிராம ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கும், காஞ்‌சிபுரம் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், ஆற்பாக்கம் கிராம ஊராட்சி வார்டு எண்9, விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், சே.கொத்தமங்கலம் கிராம ஊராட்சி வார்டு எண்3, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மானூத்து கிராம ஊராட்சி வார்டு எண்1, திருநெல்வேலி மாவட்டம், வள்ளிïர் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலன்குளம் கிராம ஊராட்சியின் வார்டு எண் 1, 5 மற்றும் 8க்கான உறுப்பினர் பதவியிடத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

9ஆ‌ம் தே‌தி (இ‌ன்று) தேர்தல் அறிவிக்கை பிரசுரித்தல் மற்றும் வேட்புமனுக்கள் பெறுதல் நடைபெறும். 16.11.2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாளாகும். 17ஆ‌ம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். 19ஆ‌ம் தேதி வேட்புமனுக்களை திருப்ப பெறலாம். 27ஆ‌ம் தேதி வாக்குபதிவு நடைபெறும். 29ஆ‌ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும். 30ஆ‌ம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவடையும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil