Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானா உருவாக்குவதில் ம‌த்‌திய அரசு அவசர‌‌ப்பட கூடாது: சரத்குமார்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2009 (11:14 IST)
WD
தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதில் ஆந்திர மாநில மக்களின் கருத்தையும், உணர்வையும் மட்டுமே அறிந்து, தனிநபர் போராட்டங்களுக்கு பணிந்துவிடாமல், மத்திய அரசு அவசர முடிவு எடுக்கக்கூடாது எ‌ன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை போராட்டமாக வெடித்ததை அடுத்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க ஆலோசித்து வருகிறது.

தனிநபர்களோ சாதி அமைப்புகளோ தனி மாநில கோரிக்கைக்காக போராட்டங்களில் ஈடுபடுவதை ஒடுக்க முடியாமல் மாநில பிரிப்பு கோரிக்கையை பரிசீலனை செய்வது நல்லதல்ல. மத்திய அரசின் இந்த முடிவால் பல மாநிலங்களிலும் இந்த கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை இருந்தும், நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுமேயானால், அந்நிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு நமது வளர்ச்சிக்கு தடைக்கற்களாக அமைந்துவிடும்.

எனவே தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதில் ஆந்திர மாநில மக்களின் கருத்தையும், உணர்வையும் மட்டுமே அறிந்து, தனிநபர் போராட்டங்களுக்கு பணிந்துவிடாமல், மத்திய அரசு அவசர முடிவு எடுக்கக்கூடாது எ‌ன்ற ு சர‌த்குமா‌ர ் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments