Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணை நடிகரை கொலை செய்தது எப்படி? குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

துணை நடிகரை கொலை செய்தது எப்படி? குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

Ilavarasan

, புதன், 14 மே 2014 (08:26 IST)
துணை நடிகர் பீட்டர் பிரின்சோவை நடிகை ஸ்ருதியுடன் சேர்ந்து கொலை செய்தது எப்படி என்பது குறித்து காவல்துறையில் சிக்கிய அவரது பழைய நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்தவர் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ (35). துணை நடிகரான இவரை, பெங்களூரை சேர்ந்த நடிகை ஸ்ருதி சந்திரலேகா மற்றும் பீட்டரின் பழைய நண்பர்கள் சேர்ந்து கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொலை செய்து நெல்லையில் புதைத்தனர்.
 
இந்த வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட பாளையை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், காந்திமதிநாதன் என்ற விஜய், ரபீக் உஸ்மான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பாளையங்கோட்டை ஆசீர்வாத நகரில் புதைக்கப்பட்ட பீட்டர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
webdunia
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜான் பிரின்சனை பாளை காவல்துறையினர்  நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:
 
நான், பீட்டர் பிரின்சோ, உமாசந்திரன் ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தோம். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பீட்டர் பிரின்சோ எங்களை பிரிந்து பெங்களூர் சென்று சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார். அதன்பிறகு நடிகை ஸ்ருதியுடன் பீட்டர் பிரின்சோவுக்கு பழக்கம் ஏற்பட்டு மதுரவாயலில் குடும்பம் நடத்தினர். இந்நிலையில், பீட்டருக்கு மேலும் பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், அவருடன் சண்டை போட்ட ஸ்ருதி, பீட்டர் பிரின்சோவை கொன்று அவரது கோடிக்கணக்கான பணத்தை அபகரிக்க திட்டமிட்டார். இதற்காக உதவி கேட்டு எங்களை நாடினார். நாங்களும் பீட்டர் பிரின்சோவால் பாதிக்கப்பட்டதால், சம்மதித்தோம். அதன்பிறகு உமாசந்திரனுக்கும், ஸ்ருதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 
 
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நெல்லையில் இருந்து மதுரவாயல் வந்த பீட்டருக்கு ஸ்ருதி பாலில் விஷம் கலந்து கொடுத்ததுடன், விஷ ஊசியும் போட்டார். நான் அவரது கழுத்தை நைலான் கயிற்றால் நெரித்துக் கொன்றேன். அதன்பிறகு உமாசந்திரன், பாளையை சேர்ந்த ஆனஸ்ட் ராஜிடம் பேசி, பீட்டர் உடலை நெல்லையில் புதைக்க ஏற்பாடு செய்தார்.
 
நான் பீட்டர் உடலை காரில் ஏற்றிக்கொண்டு நெல்லை வந்தேன். பாளை. நீதிமன்றம் அருகே ஆனஸ்ட் ராஜ், காந்திமதிநாதன், ரபீக் உஸ்மான் ஆகியோர் காரில் ஏறினர். பின்னர் ரபீக் உஸ்மானுக்கு சொந்தமான ஆசிர்வாதபுரம் இடத்தில் குழிதோண்டி பீட்டர் உடலை புதைத்தோம். இதற்காக எங்களுக்கு ஒரு பெரும் தொகையை உமாசந்திரன் கொடுத்தார். நான் திருமங்கலம் அருகே பீட்டரின் காரை ஓட்டி சென்றபோது, காவல்துறையினர் என்னை கைது செய்தனர். இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள உமாசந்திரன், நடிகை ஸ்ருதி சந்திரலேகா, நிர்மல் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil