Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக‌த்‌தி‌ல் 67 சதவீத வா‌க்குப்பதிவு

தமிழக‌த்‌தி‌ல் 67 சதவீத வா‌க்குப்பதிவு
செ‌ன்னை , வியாழன், 14 மே 2009 (09:15 IST)
தமிழக‌ம் முழுவது‌ம் நே‌ற்று நடைபெ‌ற்ற ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் 67 சத‌வீத‌ம் வா‌க்குக‌ள் ப‌திவா‌யின. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

543 உறுப்பினர்களை கொண்ட ம‌க்களவை‌க்கு 5-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி உ‌ள்பட 9 மாநிலங்களில் உள்ள 86 ம‌க்களவை‌த் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்கு அளித்தனர். காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்கு அளித்ததால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

சென்னை நகரில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்றது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமதம் ஆனது.

தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்கு ‌காவல‌ர்க‌ள் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அந்த இடங்களுக்கு காவல‌ர்க‌ள் விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினார்கள்.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அப்போது வாக்குச்சாவடிகளின் முன்பு வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டனர். இதனால் சில வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 67 சதவீத வாக்குகள் பதிவாயின.

தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு: திருவள்ளூர் (தனி) - 54, வட சென்னை - 61, தென் சென்னை - 62, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 65, காஞ்‌சிபுரம் (தனி) - 66, அரக்கோணம் - 65, வேலூர் - 58, கிருஷ்ணகிரி - 70.13, தர்மபுரி - 70.53, திருவண்ணாமலை - 69, ஆரணி - 59, விழுப்புரம் (தனி) - 70, கள்ளக்குறிச்சி - 60, சேலம் - 69, நாமக்கல் - 75, ஈரோடு - 71.66, திருப்பூர் - 71, நீலகிரி (தனி) - 62, கோவை - 60, பொள்ளாச்சி - 65.5, திண்டுக்கல் - 68.

கரூர் - 80, திருச்சி - 67, பெரம்பலூர் - 71.25, கடலூர் - 67, சிதம்பரம் (தனி) - 74, மயிலாடுதுறை - 70, நாகப்பட்டினம் (தனி) - 69, தஞ்சாவூர் - 68, ‌ிவகங்கை - 66, மதுரை - 76.6, தேனி - 62, விருதுநகர் - 70, ராமநாதபுரம் - 64.5, தூத்துக்குடி - 65.7, தென்காசி (தனி) - 63, திருநெல்வேலி - 65, கன்னியாகுமரி - 63.09, புதுச்சேரி - 80.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி `சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தியா முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் 16ஆ‌ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவுகள் தெரிய தொடங்கிவிடும். பிற்பகலுக்குள் கிட்டத்தட்ட முடிவுகள் அனைத்தும் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil