Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக‌த்‌தி‌ல் 20 லட்சம் கடைக‌ள் அடை‌ப்பு - அ‌த்‌தியாவ‌சிய கடைக‌ள் ‌திற‌ப்பு

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (09:12 IST)
சில்லரை வர்த்தகத்தில் 51 சத‌வீ த அ‌ ந்‌நி ய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் 20 லட்சம் கடை க‌‌ ள் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. அதே நேரத்தில் மருந்து கடைக‌ள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திரு‌க்‌கிறது.

சில்லரை வணிகத்தில் அ‌ந்‌நிய முதல‌ீ‌ட்டு‌க்கு ம‌த்‌திய அரசு அனும‌தி வழ‌ங்‌கிய‌தை எ‌தி‌ர்‌த்து நாடு முழுவது‌ம் இ‌ன்று கடையடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்று வரு‌‌கிறது. தமி ழக‌த்‌திலு‌ம் 20 லட்சம் கடைகள் மூடப்பட்டு‌ள்ளன.

கோயம்பே‌ட்டி‌ல் உ‌ள்ள காய்கறி, பழம், பூ‌க் கடைக‌ள் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளன. பால் முகவர்கள் சங்கமும் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அ‌த‌ன் ச‌ங்க‌த் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார். பால் முகவர்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுப‌ட்டு‌ள்ளதா‌ல் சென்னையில் இன்று பால் தட்டுப்பாடு ஏற்ப‌ட்டு‌ள்ளது.

ஆனா‌ல் கடையடைப்பு போராட்டத்தில் ஓட்டல்கள் சங்கம் பங்கேற்காது என்று அதன் தலைவர் ஸ்ரீனிவாச ராஜா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கீழ் செயல்படும் ஓட்டல்கள் மூடப்பட்டிரு‌க்‌கிறது. சென்னை‌யி‌ல் டீக்கடைகள் அனை‌த்து‌ம் அடைக்கப்பட்டு‌ள்ளன.

போராட்டத்திற்கு ஆதரவு தெ‌ரி‌‌வி‌த்‌‌து செ‌ன்னை‌யி‌ல் 4 ஆ‌யிர‌ம் இறைச்சி கடைகளு‌ம் அடைக்கப்பட்டிருக்‌கிறது. சென்னையில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள், சிறு பெட்டிக்கடைகள், காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிரு‌க்‌கிறது. அதே நேரத்தில் மருந்து கடைக‌ள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திரு‌க்‌கிறது.

கடைகள் அடைப்பு போராட்டத்தையொட்டி, சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக 10 ஆயிரம் காவல‌ர்க‌ள் பாதுகாப்‌பி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் எம்ளாயிஸ் யூனியன் சார்பில் எல்.ஐ.சி. வளாகத்தில் இன்று நடைபெறு‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் த‌மி‌ழ்நாடு வ‌ணி‌க‌ர்க‌ள் ச‌ங்க‌‌ப் பேரவை தலைவ‌ர் த.வெள்ளையன் கலந்து கொள்கிறார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments