Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மேலும் 2 ஆன்மீக சுற்றுலா அறிமுகம்

தமிழகத்தில் மேலும் 2 ஆன்மீக சுற்றுலா அறிமுகம்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (04:04 IST)
தமிழகத்தில் மேலும்  2ஆன்மீக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
 

 
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சுற்றுலாப் பயணிகளுக்காக திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 2 புதிய ஆன்மீக சுற்றுலாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
அதன்படி, ஸ்ரீரங்கம், திருப்பட்டூர், சமயபுரம் மற்றும் பிரம்மா கோவில் சுற்றுலா அக்டோபர் 16ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
 
அதே போல, ஒரு நாள் நடு நாட்டு திருப்பதிகள் என்றழைக்கப்படும் பஞ்சவடி, திருவந்திபுரம், திருக்கோவிலூர் சுற்றுலா அக்டோபர் 17ஆம் தேதி முதல் அறிமும் செய்யப்படுகிறது.
 
ஆன்மீக சுற்றுலா குறித்து மேலும் அறிய 044 - 2533 3444/ 2533 3333 / 2533 3857 / 2533 3286 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அறியலாம். மேலும், கட்டண மில்லா தொலைபேசி எண் 1800 4253 1111 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். 
 

Share this Story:

Follow Webdunia tamil