Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தட்க‌லில் எ‌ஸ்.எ‌ஸ்.எ‌ல்.‌சி தேர்வுக்கு விண்ணப்ப‌ம்

தட்க‌லில் எ‌ஸ்.எ‌ஸ்.எ‌ல்.‌சி தேர்வுக்கு விண்ணப்ப‌ம்
, சனி, 3 மார்ச் 2012 (11:06 IST)
எ‌ஸ்.எ‌ஸ்.எ‌ல்.‌சி தேர்வுகளுக்கும் தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க 5ஆ‌ம் தேதி முதல் 7ஆ‌ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ‌ன்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 2012-ல் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு (புதிய பாடத்திட்டம்) மற்றும் பழைய பாடத்திட்டத்தின்கீழ் எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (புதிய பாடத்திட்டம்) விண்ணப்பிக்க தகுதியானவர்கள் : செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேற்படி தேர்வர்கள் செய்முறை வகுப்புகள் நடைபெற்ற சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது மாவட்டக்கல்வி அலுவலரிடமிருந்து செய்முறை பயிற்சி தேர்வு வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான தேர்வரின் புகைப்படத்துடன் உரிய ஆதாரத்தைப் பெற்று கருத்தியல் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்காமல் கருத்தியல் தேர்வுக்கு இச்சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் விரும்பினால் கருத்தியல் தேர்வில் மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 100-க்கு மாற்றி வேறுபாட்டை செய்முறை மதிப்பெண்ணாகக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் தேர்வுக்கட்டண விவரம் : சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கட்டணம்- ரூ.500, தேர்வுக்கட்டணம் (அனைத்து பாடங்களுக்கும்)- ரூ.125, மொத்தம்- ரூ.625.

பழைய பாடத்திட்டம் (எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பொதுத்தேர்வு)

ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மெட்ரிக், ஆங்கிலோ -இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வினை எழுதி தோல்வியுற்ற தேர்வர்கள், மேற்படி தோல்வியுற்ற பாடங்களை சிறப்பு அனுமதி திட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

பழைய பாடத்திட்டத்தில் இடைநிலை, ஓ.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளுக்கான கட்டண விவரம் : சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கட்டணம்- ரூ.500, தேர்வுக்கட்டணம் (அனைத்து பாடங்களுக்கும்)-ரூ.125, மொத்தம்- ரூ.625.

பழைய பாடத்திட்டத்தில் மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகளுக்கான கட்டண விவரம் :

ஒரு பாடத்துக்கு - மெட்ரிக் தேர்வு ரூ.100+35+500-ரூ.635. கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்துக்கும் மேற்காண் தொகையுடன் ரூ.100 கூடுதலாக செலுத்தவேண்டும்.

ஆங்கிலோ - இந்தியன் தேர்வு- ரூ.50+35+500-ரூ.585. கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்துக்கும் மேற்காண்ட தொகையுடன் ரூ.50 கூடுதலாக செலுத்தவேண்டும்.

சென்னை உள்பட அனைத்து மாவட்டத்தில் உள்ள தேர்வர்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தனித்தேர்வர்களும் தேர்வுக்கட்டணத்தை கருவூல செலுத்துச்சீட்டு மூலம் மட்டுமே செலுத்தி அசல் கருவூல ரசீதினை இணைத்து விண்ணப்பத்தினை நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: அரசு தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகம், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பதாரரே நேரில் ஒப்படைக்க வேண்டும். தபால் மற்றும் கூரியர் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள் 7-ந் தேதி மாலை 5 மணி.

விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் ஒட்டப்படும் புகைப்படத்தில் இறுதியாகப் பயின்ற பள்ளித்தலைமை ஆசிரியரிடத்தில் மட்டுமே சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்துகொண்டு, ஆனால் கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காத நேரடி தனித்தேர்வர் அவர்களது வீட்டு முகவரிக்கு அருகிலுள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெறவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் வரு‌ம் 5ஆ‌ம் தேதி முதல் 7ஆ‌ம் தேதி வரை நேரில் பெற்றுக்கொள்ளப்படும் எ‌ன்று வசுந்தரா தேவி தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil