Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு அறிவிப்பு

Webdunia

, செவ்வாய், 3 ஜூலை 2007 (15:01 IST)
டாஸ்மார்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மட்டுமின்றி, பாஸ்மார்க் கடைகள் இயங்கும் நேரத்தை 3 மணி நேரம் குறைத்தும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் பெற்று வரும் ஊதியம் ரூ.3000 இருந்து ரூ.3500 ஆகவும், விற்பனையாளர்கள் ஊதியம் ரூ.2000 இருந்து , ரூ.2400, ஆகவும் மதுக்கூட உதவியாளர்க்ளுக்கான ஊதியம் ரூ.1500 இருந்து ரூ.1800 ஆகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 30,730 பணியாளர்கள் பயன் அடைவார்கள் என்றும், இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 17 கோடியே 27 லட்சம் ரூபாய் செல்வாகும். டாஸ்மாக் கடைகளின் திறந்திருக்கும் நேரத்தை 3 மணி நேரம் குறைத்து காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது.

பணியிலிருக்கும்போது மரணமடைந்திடும் பணியாளரின் குடும்பத்திற்கு குடும்ப நலத்திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் தொகையான ஒரு லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டு, இனி வருங்காலங்களில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக வழங்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil