Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் நிராகரிப்பு-கனிமொழி, ராசாத்தி கண்ணீர்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2011 (13:47 IST)
கனிமொழி மற்றும் 7 பேர் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தவுடன் கனிமொழியும், அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுதனர்.

முன்னதாக 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கனிமொழி தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி இன்று அறிவித்தார்.

2 ஜி வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டதையடுத்து கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று திமுகவினர் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டது அவர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. ஜாமீன் மறுக்கப்பட்ட செய்தி அறிந்து திமுக தலைவர் கருணாநிதி மிகுந்த சோகமடைந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தவுடன் கனிமொழி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்து அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் கண்ணீர் விட்டு அழுததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments