விமானிகளின் வேலை நிறுத்தத்தால் சென்னையில் இருந்து புறப்படும் 6 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உள்நாட்டு விமானங்கள் ஆகும்.
சென்னையில் இருந்து மும்பை நகருக்கு புறப்பட வேண்டிய 3 விமானங்கள் உட்பட மொத்தம் 6 உள்நாட்டு விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும், சிங்கப்பூர் உள்ளிட்ட இதர சர்வதேச நகரங்களுக்கு சென்னையில் இருந்து இயக்கப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.