Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள்

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள்
, புதன், 1 ஆகஸ்ட் 2012 (09:52 IST)
வேளாங்கண்ணி மாதா ஆலய விழாவையொ‌ட்டி பக்தர்கள் வசதிக்காக சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரெயில்களை தெ‌ற்கு இர‌யி‌ல்வே இய‌க்க உ‌ள்ளது.

வரு‌ம் 27ஆ‌ம் தேதி (வ.எண்.060590), 3ஆ‌ம் தேதி (வ.எண்.006061) ஆகிய ரெயில்களும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 3ஆ‌ம் தேதி(வ.எண்.06059), 8ஆ‌ம் தேதி (வ.எண்.06063) போன்ற ரெயில்களும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரெயில்கள் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30க்கு வேளாங்கண்ணியை சென்றடைகின்றன.

இதைபோல வரு‌ம் 28ஆ‌ம் தேதி (வ.எண்.06060), 31ஆ‌ம் தேதி (வ.எண்.06062) ஆகிய ரெயில்களும், அடுத்த மாதம் 4ஆ‌ம் தேதி (வ.எண்.06060), 9ஆ‌ம் தேதி (வ.எண்.06064) போன்ற ரெயில்களும் வேளாங்கண்ணி ரெயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கும் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் இரவு 10.15 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

சென்னை மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன.

இதுதவிர வாஸ்கோடகாமாவிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு இருமார்க்கமாக விழாக்கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07315) வரு‌ம் 29ஆ‌ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 2, 9ஆ‌ம் தேதிகளில் வாஸ்கோடகாமாவிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இதே சிறப்பு ரெயில் (வ.எண்.07316) வரு‌ம் 30ஆ‌ம் தேதி மற்றும் செப்ட‌ம்ப‌ர் 3, 9 ஆ‌கிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.50 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடைகிறது. இந்த அனைத்து ரெயில்களுக்கும் முன்பதிவு தொடங்கிவிட்டது எ‌ன்று தெற்கு ரெயில்வேயின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil