இன்னும் 2 வாரங்கள்... சென்னை நிகழப்போகும் மாற்றங்களை பாருங்க!!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (12:46 IST)
சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என நம்பிக்கை. 
 
நேற்று தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.  
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,149 பேர்களில் சென்னையில் மட்டும் 804 பேர் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.  
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1798, தேனாம்பேட்டையில் 1662, தண்டையார்பேட்டையில் 1661, அண்ணா நகரில் 1237, அடையாறில் 834, வளசரவாக்கத்தில் 871 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் இருக்கும் சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார். இது சென்னை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பேட்டியாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments