Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு 10 நா‌ள் தசரா விடுமுறை

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (10:57 IST)
சென்னை உய‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ம ், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளைக்கும் வரும் 19ஆ‌ம் தேதி முதல் 28ஆ‌ம் தேதி வரை தசரா விடுமுறை விடப்படுகிறது.

வரும் 24ஆ‌ம் தேதி விடுமுறை கால ‌நீ‌திம‌ன்ற‌ம் இயங்கும் எ‌ன்று‌ம் நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், டி.சுதந்திரம் ஆகியோர் முத‌ன்மை அம‌ர்‌வி‌ல் அம‌ர்‌ந்து முதலில் வழக்குகளை விசாரிப்பார்கள் எ‌ன்று‌ம் பின்னர் நீதிபதி பால்வசந்தகுமார் சிவில் மற்றும் ரிட் வழக்குகளையும், நீதிபதி டி.சுதந்திரம் ‌பிணை, முன்‌பிணை போன்ற கிரிமினல் வழக்குகளையும் விசாரிப்பார்கள் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோல 24ஆ‌ம் தேதி மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையில் நீதிபதிகள் ஆர்.எஸ்.ராமநாதன், டி.அரிபரந்தாமன் ஆகியோர் முதலில் முத‌ன்மை அம‌ர்‌வி‌ல் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பின்னர் நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் ‌பிணை, முன்‌‌பிணை போன்ற கிரிமினல் வழக்குகளையும், நீதிபதி அரிபரந்தாமன் சிவில் மற்றும் ரிட் வழக்குகளையும் விசாரிப்பார்கள் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த விடுமுறை கால ‌நீ‌திம‌ன்ற‌ங்களுக்கு 23ஆ‌ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லும், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையிலும் மனுக்களை தாக்கல் செய்யலாம் எ‌ன்று‌ம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments