Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை‌- நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு இர‌யி‌ல் இய‌க்க‌ம்

சென்னை‌- நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு இர‌யி‌ல் இய‌க்க‌ம்
, வியாழன், 4 பிப்ரவரி 2010 (11:11 IST)
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னை சென்‌ட்ரல், எழும்பூர்-நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது தொட‌‌ர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரு‌ம் 6ஆ‌ம் தேதி முதல் மா‌ர்‌ச் 27ஆ‌ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் (வாராந்திரம்) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (வ.எண். 0605) எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

மறுமார்க்கம், நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு வரு‌ம் 7ஆ‌ம் தேதி முதல் மா‌ர்‌ச் 28ஆ‌ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இரயில் (0606) நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

இந்த சிறப்பு இரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும். வண்டி எண் 0606 கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும்.

அதே போல், சென்னை சென்‌ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வரு‌ம் 5ஆ‌ம் தேதி முதல் மா‌ர்‌ச் 26ஆ‌ம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0601) சென்‌ட்ரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

மறுமார்க்கம், நாகர்கோவிலில் இருந்து சென்‌ட்ரலுக்கு 6ஆ‌ம் தேதி முதல் மா‌ர்‌ச் 27ஆ‌‌ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0602) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்டிரலை வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 0602 சிறப்பு ரயில் மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்‌கியு‌ள்ளது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil