Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க சரத்குமார் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2010 (16:06 IST)
சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில ், வியாபாரம ், வேல ை, கல்வ ி, திருவிழாக்கள ், சிறப்பு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகள் பெருகி வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்துத் பெருகி வந்தாலும ், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்க ு, குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து மிக அதிக அளவில் போக்குவரத்து தேவை அவசியமாகிறது.

எனவேதான ், விடுமுறை நாட்கள ், பிற பண்டிகை நாட்கள் என்று இல்லாமல் சாதாரண நாட்களில் கூட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும ், ரயில்களிலும் கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து கூடுதலாக போக்குவரத்து ஏற்பாடு செய்தாலும் மக்களின் தேவைகளுக்கு சரியாக இருக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் தென்னக ரயில்வே வாரம் ஒருமுறை மட்டும் சென்னை-திருச்செந்தூர் இடைய இயக்கப்படும் ‘செந்தூர் எக்ஸ்பிரஸ ் ’ ரயிலை தினசரி இயக்க வேண்டும்.

திருச்செந்தூர் தமிழகத்தின் பிரபலமான கோவில் தளமாக விளங்குகிறது. ஏறக்குறைய ஓராண்டு காலமாக வாராந்திர ரெயிலாக இயங்கி வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்யாமலே இருந்து வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

தென்னக ரயில்வே நிர்வாகம் தென் மாவட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பயண நேரத்தை குறைக்கும் விதமாக இந்த ரெயிலை கார்டு லைன் மார்க்கமாக தினசரி இயக்க வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டப்பணிகள் மிகக் குறைந்த வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே அமைச்சகம் இதில் தலையிட்டு தமிழகத்திற்கான ரயில்வே பணிகளை துரிதப்படுத்தி விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன ் ” எனக் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments